புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்விற்கு முன்னதாக பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்றது சட்டவிரோதமானது என சில தரப்பினர் தெரிவிப்பதில் எந்த விதமான ஆதாரமும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து முகநூல் பதிவில் சுட்டிக்காட்டியுள்ள அவர் பாராளுமன்றத்தின் முதல் அமர்வு வரை பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்காது காத்திருக்கவேண்டும் என்பது தவறான கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்றுரீதியில் புதிய பாராளுமன்றத்தின் அமர்விற்கு முன்னரே பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்பது வழமையான ஒரு விடயம் என சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜேர்ஆர் ஜெயவர்த்தன, டிபிவிஜயதுங்க,சந்திரிகா குமாதரதுங்க ஆகியோர் தங்கள் அமைச்சரவையுடன் 1977,89 1994 இல் நாடாளுமன்றத்தின் முதல் அமர்விற்கு முன்னர் பதவியேற்றார்கள்.2001 இல்ரணில்விக்கிரமசிங்க அவ்வாறே பதவியேற்றார்,2004 இல் மகிந்த ராஜபக்சவும், 2015 இல் ரணில் விக்கிரமசிங்கவும்,அவ்வாறே பதவியேற்றனர் என சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார்