2004ஆம் ஆண்டு உலகலாவிய ரீதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்திய சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகியுள்ளன.
இந்நிலையில், இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களையும் காணாமல் போன உறவுகளையும் நினைவுகூரும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பில் இன்று காலை 8.05 மணியளவில் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட கூரும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – வடமராட்சி, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவேந்தல் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது, ஈகை சுடர் ஏற்றப்பட்டு பொது நினைவு துபிக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு குறித்த நிகழ்வுகள் ஆர்மபமாகியுள்ளன.