முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
அண்மையில் யோஷிதவுக்கு திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமையவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.
மேலும், கதிர்காமம் பகுதியில் உள்ள அரச காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக இன்று ஆஜராகுமாறு யோஷித ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முன்னாள் பிரதம பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சியிடம் கடந்த வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.