மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று அறவிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது 12 .5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 3 ,690 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 1 ,482 ரூபாவாகவும், உள்ளது.
2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகும்.
இதேவேளை, laughs சமையல் எரிவாயுவின் விலையை மாற்றியமைப்பதற்கு குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று laughs நிறுவன குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.