வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் எனவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு இக் காற்றழுத்தம் அதிகரித்து செல்லும் வாய்ப்பு காணப்படுவதாகவும் சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
மத்திய, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.அத்துடன் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும்.
மத்திய, ஊவா, மேல் ,சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.
கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலயத்திற்கு 45 -50 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும். அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.