அநுராதபுரம், பூனேவ சந்திக்கு அருகில் வெடிபொருட்களுடன் சந்தேக நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பூனேவ பொலிசார் தெரிவித்தனர்.
பூனேவ பொலிசாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் களுத்துறை, மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 150 கிராம் அம்மோனியம் நைட்ரேட் மற்றும் ஜெலட் நைட் குச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.