2025 ஆம் ஆண்டின் முதல் சதத்தை உலக கிரிக்கெட் அரங்கில் பெற்ற வீரர்!

2025 ஆம் ஆண்டின் முதல் சதத்தை உலக கிரிக்கெட் அரங்கில் இலங்கையின் வீரர் ஒருவர் பெற்றுள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது 20இற்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் குசல் பெரேரா இந்த சதத்தை பெற்றுள்ளார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது 20இற்கு 20 போட்டி இன்று செக்சன் ஓவலில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தமது 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில், குசல் பெரேரா 46 பந்துகளை எதிர்கொண்டு 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இதுவே 2025ஆம் ஆண்டு உலக கிரிக்கெட்டில் பெறப்பட்ட முதல் சதமாக கருதப்படுகிறது.

சரித் அகலங்க 46 ஓட்டங்களை பெற்றார். இந்தநிலையில் நியூஸிலாந்து அணி 219 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட 20இற்கு 20 தொடரில் ஏற்கனவே நியூஸிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

Related News

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார்!

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மீண்டும் அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் 15,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை பெற்றுள்ள அவர், 25 சதங்களையும் பெற்றுள்ளார். இந்தநிலையில் அடுத்த மாதம் நடைபெறும்…

Read More
19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணம் இலங்கை குழாம் அறிவிப்பு!

மலேசியாவில் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் சற்று நேரத்திற்கு முன்னர் வெளியிட்டது. மலேசியாவில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

தோல்வியடைந்த இலங்கை அணி!

தோல்வியடைந்த இலங்கை அணி!

இன்றைய வானிலை 24.01.2025

இன்றைய வானிலை 24.01.2025

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!