நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, சமுத்திரக்கனிக்கும், படக் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘திரு. மாணிக்கம் ‘எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா, இளவரசு, நாசர் ,சின்னி ஜெயந்த் ,வடிவுக்கரசி ,கருணாகரன், சுலீல் குமார், கிரேஸி, சந்துரு , சாம்ஸ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை ஜிபி ஆர் கே சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜி பி ரேகா ரவிக்குமார் , சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி , ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இம்மாதம் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் மலையும் மலை சார்ந்த பகுதியில் வாழும் மாணிக்கம் எனும் தனி மனிதரின் வாழ்வியல் சார்ந்த படைப்பாக உருவாகி இருப்பதாலும் காட்சிகள் உணர்வுபூர்வமாகவும், மனித நேயத்தை மையமாகக் கொண்டிருப்பதாலும் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது என கூறப்படுகிறது.

Related News

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம்!

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் ‘ராமாயணம்’ படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி , அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் லட்சுமணனாக நடிப்பது யார் என்பது ரசிகர்களிடம்…

Read More
சின்னத்திரை பிரபல நடிகர் நேத்ரன் காலமானார்!

பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் நேற்றிரவு காலமானதாக இந்திய ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன. மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலனமானார். 25 ஆண்டுகளாக பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நேத்ரன், கடந்த…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

களுத்துறையில் வீடொன்றில் தீ விபத்து!

களுத்துறையில் வீடொன்றில்  தீ விபத்து!

மின்சாரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை துண்டிக்க நேரிடும் அபாயம்!

மின்சாரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை துண்டிக்க நேரிடும் அபாயம்!

யாழில் பரவி வரும் காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் பரவி வரும் காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு தொடர்பாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் கருத்து!

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு தொடர்பாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் கருத்து!

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள யாழ் மாணவி!

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள யாழ் மாணவி!