சிரியாவில் ஐஎஸ் அமைப்பு மீண்டும் தலைதூக்க முயலும் எனவும் அவ்வாறு நடைபெறுவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்காது எனவும் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
சிரிய மக்களே தங்கள் எதிர்காலத்தை தெரிவுசெய்யவேண்டும்.
அமைதியான ஆட்சியொன்றை உருவாக்குவது குறித்த கிளர்ச்சியாளர்களின் அறிக்கைகள் வரவேற்கத்தக்கவை.ஆனால் அவர்களின் நடவடிக்கைகளே முக்கியம் வார்த்தைகள் இல்லை.
சிரியாவின் பசார் அல் அசாத் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணம் காட்டுமிராண்டித்தனத்தையும் ஊழலையும் சாத்தியமாகியமையே, ஈரான் ஹெஸ்புல்லா ரஸ்யா ஆகிய தரப்பினரை விட வேறு எவரும் இதனை செய்யவில்லை.
இந்த தருணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது,அதேவேளை குறிப்பிடத்தக்க ஆபத்துக்களும் உள்ளன.
நம்பிக்கையை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் எவ்வளவு வேகமாக மாற்றமடையலாம் வன்முறை மோதலாக மாறலாம் என்பதை வரலாறு வெளிப்படுத்துகின்றது.
மேலும், தன்னை மீண்டும் வலுப்படுத்திக்கொள்வதற்கு இந்த தருணத்தை ஐஎஸ் அமைப்பு பயன்படுத்திக்கொள்ளும்,தனது மறைவிடங்களை ஏற்படுத்த முயலும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.