ஸ்பைடர் மேன் பட ஜோடி டாம் ஹாலண்ட் – ஜெண்டயா விரைவில் திருமணம்!

2021ல் வெளிவந்த ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்கள் டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா. இவர்கள் இவருடைய ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் படத்தை தொடர்ந்து ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம், ஸ்பைடர் மேன்: நோ வே ஹாம் ஆகிய படங்களில் இருவரும் ஜோடிகளாக நடித்தனர். இவர்கள் இருவரும் 2021ல் இருந்தே டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது.

இந்த நிலையில் தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த கோல்டன் குளோப் விருது விழாவிற்கு நடிகை ஜெண்டயா வைர மோதிரத்தை கையில் அணிந்து வந்திருந்தார். இதன்மூலம் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை என தெரியவந்துள்ளது.

புத்தாண்டு அன்று இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்களாம். விரைவில் இதுகுறித்து டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Related News

நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்ஸ் ‘எனும் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் நட்சத்திர அந்தஸ்திற்காக மீண்டும் கடுமையாக உழைத்து வரும் நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அப்படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.…

Read More
‘இந்தியன் 3’ பற்றி மனம் திறந்த இயக்குனர்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கடுமையான விமர்சனங்களைப் பெற்று படுதோல்வியை தழுவியது. ஆனால், ‘இந்தியன் 2’ பட முடிவில் ‘இந்தியன் 3’ படத்திற்கான முன்னோட்டம் இணைக்கப்பட்டிருந்தது. அடுத்த 6 மாதத்தில்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

தோல்வியடைந்த இலங்கை அணி!

தோல்வியடைந்த இலங்கை அணி!

இன்றைய வானிலை 24.01.2025

இன்றைய வானிலை 24.01.2025

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!