வன்னி தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு அவசியமான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குசீட்டுகள் பொலீஸாரின் பாதுகாப்புடன் இன்று 387 வாக்களிப்பு நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ.சரத் சந்திர தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்டத்தின் வவுனியாவில் 152, முல்லைத்தீவில் 137, மன்னாரில் 98 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் வன்னி மாவட்டத்தில் மொத்தம் 306,081 வாக்காளர்கள் தகுதிபெற்றுள்ளனர்: வவுனியாவில் 128,585, முல்லைத்தீவில் 86,889, மன்னாரில் 90,607 எனப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் கடமைகளில் 4,995 அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 3,898 பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் மன்னார் மாவட்டங்களில் 107 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மத்திய நிலையங்கள், வவுனியாவில் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, மன்னாரில் மாவட்டச் செயலகம், மற்றும் முல்லைத்தீவில் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளன.