நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தில் நெற்பயிர் செய்கைகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
ஏழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை , கச்சாய், கைத்தடி, நாவற்குழி, தச்சன் தோப்பு மற்றும் தனக்கிளப்பு போன்ற நெல் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பலத்த மழை காரணமாக தென்மராட்சி பிரதேசத்தில் 1,302 குடும்பங்களை சேர்ந்த 4 , 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் 205 குடும்பங்களை சேர்ந்த 728 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 50 குடும்பங்களை சேர்ந்த 168 பேரும், போகட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 47 குடும்பங்களை சேர்ந்த 281 பேரும், நாவற்குழி சீயோன் தேவாலயத்தில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.