மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெல அராவ பகுதியில் நேற்று சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18, 39, 46 மற்றும் 58 வயதுடைய ஆனமடுவ, மெதகம மற்றும் மடுகல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் உட்பட புதையல் தோண்டும் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும்,மெதகம பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.