மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி அஞ்சலி!

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு
நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டில்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் . அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், டில்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட பலரும் மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின் மன்மோகன் சிங்கின் உடல் நாளை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது.

Related News

நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்!

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள பொலிவுட் முன்னணி நடிகரான சைஃப் அலிகானின் வீட்டினுள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையிட சென்ற நபரொருவருக்கும் சைஃப் அலிகானிற்கும் இடையில் நடந்த சண்டையில் சைஃப் அலிகான் கத்திகுத்திற்கு இலக்காகியுள்ளார். மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட…

Read More
இந்திய – மும்பையில் பல கோடி ரூபாய் முதலீட்டு மோசடி!

இந்திய – மும்பையில் பல கோடி முதலீட்டு மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நகையக உரிமையாளர்கள், இலங்கையிலும் தமது மோசடியை விஸ்தரிக்க திட்டமிட்டதாக இந்திய – மும்பை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இதன்னடிப்படையில் இந்திய – மும்பை பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், முன்னதாக,…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

இலங்கையில் அதிகரிக்கும் COPD நோய்!

இலங்கையில் அதிகரிக்கும் COPD  நோய்!

வாகன விலை கூடுமா? குறையுமா?

வாகன விலை கூடுமா? குறையுமா?

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!