எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை மொத்தமாக 2,580 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 744 முறைப்பாடுகள் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,781 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதேவேளை, வன்முறைக் சம்பவங்கள் தொடர்பில் மாவட்ட நிலையத்திற்கு 20 முறைப்பாடுகளும், ஏனைய விடயங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன.