கண்டி,பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடம்வல, முருதலாவ பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து மூதாட்டி உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிசார்
தெரிவித்தனர்.
பேராதனை, முருதலாவ பிரதேசத்தில் வசிக்கும் 74 வயதான மூதாட்டி ஒருவரே உயிரிழந்துள்ளார்.இந்த
சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தன்று, உயிரிழந்த மூதாட்டியின் மகள் மூதாட்டி வீட்டில் இல்லாதிருப்பதை அவதானித்து அவரை தேடும் பணியில் ஈடுபட்ட போது மூதாட்டி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் விழுந்து கிடப்பதை கண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார்
தெரிவித்தனர்.