பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ்ப்பாண காவல்துறை அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி மகிழுந்து ஒன்றுடன் மோதி விபத்தை ஏற்டபடுத்தியதுடன், வாகன சாரதியை கடுமையாக காயப்படுத்தியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சமத்துவம் தொடர்பான வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்து வழக்கு விசாரணைகளில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதனால் அவருக்கு இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.