பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை புத்தகங்கள் கொள்வனவு செய்ய முடியாத பிள்ளைகளுக்கு அரசாங்கத்தால் கொடுப்பனவு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய, கொடுப்பனவு வழங்குவதற்கு தகுதியான மாணவர்களின் தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறைந்தளவு வருமானத்தை பெறும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, அந்த குடும்பங்கள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கொடுப்பனவு வழங்கப்படும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.