பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார்!

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மீண்டும் அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் 15,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை பெற்றுள்ள அவர், 25 சதங்களையும் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் அடுத்த மாதம் நடைபெறும் செம்பியன்ஸ் கிண்ண அணியில் மீண்டும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.

அவர் 70 டெஸ்ட், 243 ஒருநாள் மற்றும் 78, 20க்கு 20 போட்டிகளில் விளையாடி, அனைத்து வடிவங்களிலும் சதம் பெற்றுள்ளார்.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டு பங்களாதேஸின் சர்வதேச அணியிலிருந்து தமீம் விலகினார், ஆனால் நாட்டின் அப்போதை பிரதமரின் தனிப்பட்ட தலையீட்டிற்குப் பின்னர், தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

எனினும் அவர், 2023 உலகக் கிண்ண அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்தநிலையில், செம்பியன்ஸ் கிண்ணத்துக்கான அணியில் அவரை மீண்டும் சேர்க்க ஆர்வமாக இருந்த தேசிய தேர்வாளர்களை சந்தித்த நிலையிலேயே, தமீம் தற்போது ஓய்வையும் அறிவித்துள்ளார்.

செம்பியன்ஸ் கிண்ணம் போன்ற ஒரு பெரிய போட்டி வருவதால், தம்மை சுற்றி மீண்டும் விவாதங்கள் நடைபெறுவதையும், இதனால் அணியின் கவனம் சீர்குலைவதையும் தாம் விரும்பவில்லை என்று குறிப்பிட்டே அவர் தமது ஓய்வை அறிவித்துள்ளார்.

செம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகள், 2025 பெப்ரவரி 19 முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகின்றன.

இதில் பங்களாதேஷ் குழு யு இல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றுடன் இடம்பெற்றுள்ளது.

Related News

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணம் இலங்கை குழாம் அறிவிப்பு!

மலேசியாவில் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் சற்று நேரத்திற்கு முன்னர் வெளியிட்டது. மலேசியாவில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர்…

Read More
புதிய செயலியை அறிமுகப்படுத்தும் இலங்கை கிரிக்கெட்!

இலங்கை கிரிக்கெட் சபையானது ‘ஸ்ரீ லங்கா கிரிக்கெட் லைவ்’ என்ற பெயரில் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த செயலியின் மூலமாக நேரடி ஓட்ட விபரங்கள், நேரடி…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

தோல்வியடைந்த இலங்கை அணி!

தோல்வியடைந்த இலங்கை அணி!

இன்றைய வானிலை 24.01.2025

இன்றைய வானிலை 24.01.2025

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!