நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம் என அகில இலங்கை அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் யுகேசேமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
மீண்டும் மீண்டும் இந்த பிரச்சினை உருவாகின்றது இதற்கு தீர்வை காண்பதற்கு நிரந்தர மூலோபாயம் அவசியம்.
எதிர்கால நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக நெல் சந்தைப்படுத்தும் சபையின் ஊடாக முறையான திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தற்போதைய பற்றாக்குறையை போக்குவதற்காக குறுகிய கால நடவடிக்கையாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பியர் உற்பத்திக்கு அரிசியை பயன்படுத்துவது தொடர்பிலும்,கால்நடை தீவனத்திற்கு பயன்படுத்துவது தொடர்பிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.