நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட் ‘ படத்தின் தொடக்க விழாதமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, நட்சத்திர அந்தஸ்திற்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக கடினமாக உழைத்து வரும் நடிகர் உதயா கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘ அக்யூஸ்ட் ‘எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் பிரபு ஸ்ரீ நிவாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘ அக்யூஸ்ட் ‘ எனும் திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஐ . மருதநாயகம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு நரேன் பாலக்குமார் இசையமைக்கிறார் .
கேங் ஸ்டர் பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் – ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்ஷன்- MIY ஸ்டுடியோஸ் – ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ. எல் . உதயா- என். பன்னீர்செல்வம் – எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் அல்ல. சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறோம் ” என்றார்.
சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் வருகை தந்து படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.