
கொலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு கடைசிப் போட்டியில் விளையாடிய இலங்கை 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
முதல் இரண்டு போட்டிகளில் துடுப்பாட்டத்தை முதலில் தெரிவு செய்த மனுதி நாணயக்கார, இந்தியாவுடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றும் களத்தடுப்பை தெரிவு செய்தது அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாம் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது துடுப்பாட்ட வரிசையில் ஏற்படுத்திய மாற்றங்களும் இலங்கை அணிக்கு பலன் தராமல் போனது.
119 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் தாக்குப்பிடித்த போதிலும் 9 விக்கெட்களை இழந்து 58 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுகொண்டது.