தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண்பதற்காக,குறுகிய காலத்திற்குள் தேங்காய்களை பெற்றுகொள்ளும் வகையில் கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்வதாக தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இப் புதிய திட்டத்தின் மூலம் 3 வருடம் என்ற குறுகிய காலத்திற்குள் அதிக தேங்காய்களை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் நாட்டில் அண்மை காலமாக தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், புதிய கலப்பின தென்னைகளை அறிமுகம் செய்வதன் மூலம் தேங்காய்க்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.