சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்த இரண்டு சீனப் பெண்கள் சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டப்பட்டு கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளன . இந்த சம்பவம் நேற்று பிற்பகல் கண்டி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சீன பெண்கள் இருவரும் 47 மற்றும் 48 வயதுடையவர்கள் ஆவர்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காகக் கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.