சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் இருநூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலை கடந்துள்ளது.
அமரன் திரைப்படம், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளிவந்தது. இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே மிகுந்த ஆதரவைப் பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் பின்னணியில், நடிகர் சிவகார்த்திகேயனின் ஊதியம் இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும், புதிய படங்களில் நடிக்க 60 கோடி ரூபா சம்பளத்தை கேட்டுள்ளதாகவும் திரைப்பட வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.