கொழும்பு, மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் பிரிவினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மருதானை, மாளிகாகந்த பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நீதிமன்றத்திற்கு அருகில் இருந்த நபரொருவரை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இதனையடுத்து, பொலிசாரால்
மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு 10 மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21 மற்றும் 24 வயதுடையவர்கள் ஆவார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளும் பொலிசாரால் கைப்பபற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மெலதிக விசாரணைகளை கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் பிரிவினர் மற்றும் மருதானை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.