
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கொஹுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவில பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூவர் இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
களுபோவில பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞனும் 54 வயதுடைய பெண்ணொருவரும் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய நபரொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் இன்றைய தினம் கல்கிசை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.