நாட்டில் தற்போது அதிகளவிலான இளைஞர்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகுவதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பின் வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சமூக சுகாதார விசேட வைத்தியர் விந்தியா குமரபேலி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி புதிய தொழிநுட்ப முறையின் மூலம் துணைவர்களை தேடுதல் மற்றும் பாலியல் தொடர்பான தெளிவின்மை போன்ற காரணங்களால் இந்த நோய் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2023 ம் ஆண்டு 694 எச்.ஐ.வி தோற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
புதிய நோயாளர்களில் 15 சதவீதமானவர்கள் 15 தொடக்கம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாவர். இதன் அடிப்படையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் இதனை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.