இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற கன்னி அமர்வு இன்று (21) ஆரம்பமாகவுள்ளது.
பாராளுமன்ற முதலாவது அமர்வில் சபாநாயகர் தெரிவுசெய்யப்படுவார். சிரேஷ்டத்துவம் மற்றும் தகைமை அடிப்படையில் சபாநாயகர் தெரிவு செய்யப்படுவார்.
சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒருவரின் பெயர் மாத்திரம் முன்மொழியப்பட்டால் ஏகமனதாக தெரிவு இடம்பெறும். சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டவுடன் சபாநாயகர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வர்.
அணிவகுப்பு ஏதுமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் இடம்பெவுள்ள பாராளுமன்றித்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் முன்வைப்பார்.