நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் 10 வான்கதவுகளும் அங்கமுவ நீர்த்தேக்கத்தில் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் அதிகளவு நீர் கலாவாவிக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நொச்சியாகம, ராஜாங்கனை, வண்ணாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வெள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கலா ஓயாவை அண்மித்த தாழ்நில பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேநேரம், களனி ஆற்றின் பெரும்பாலான நீரேந்தும் பகுதிகளில் கணிசமான அளவு மழை பெய்துள்ளதன் காரணமாக, அதன் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சீதாவாக்கை, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, மற்றும் வத்தலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் களனி கங்கையை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியம் நிலவுகின்றது. இதன் காரணமாக குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்களும், அந்த வழியாக செல்லும் வாகன சாரதிகளும் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.