இன்றைய வானிலை!

இன்று மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும், மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.

மேலும், மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்று ஏற்பட்டால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

காங்கேசன்துறை முதல் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை வழியாக காலி வரையிலான கடல் பிராந்தியங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிமீ வேகத்தில் புத்தளம் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான பகுதியில் வடகிழக்குத் திசையிலிருந்து காற்று வீசக்கூடும். நாட்டை சுற்றியுள்ள மற்ற கடல் பகுதிகளில் வடமேற்குத் திசையில் அல்லது மாறுபட்ட திசையிலிருந்து காற்று வீசும்.

புத்தளம் முதல் காங்கேசன்துறை வழியாக திருகோணமலை வரை, கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிமீ வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும், இவ்விடங்களில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

பொதுவாக நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் பலத்த காற்று வீசுவதுடன், அவ்வேளையில் கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றும் கூறியுள்ளார்.

 

  • Related News

    பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் பொலிஸில் முறைப்பாடு!

    யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாண வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில்…

    Read More
    யாழில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

    யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் சங்கரன் தோட்டம் கரணவாய் தெற்கைச் சேர்ந்த சிவகுரு சிவபூங்கா…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் பொலிஸில் முறைப்பாடு!

    பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் பொலிஸில் முறைப்பாடு!

    யாழில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

    யாழில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

    தேங்காய் ஏற்றுமதியின் மூலம் பெரும் இலாபம் ஈட்ட திட்டமிடும் வியாபாரிகள்!

    தேங்காய் ஏற்றுமதியின் மூலம் பெரும் இலாபம் ஈட்ட திட்டமிடும் வியாபாரிகள்!

    கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் தம்பதி!

    கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் தம்பதி!

    இறக்குமதி அரிசிக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி வெளியீடு!

    இறக்குமதி அரிசிக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி வெளியீடு!

    வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது!

    வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது!