வடக்கு மற்றும் மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.
மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் ஏற்டபடலாம்.
இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் எட்டப்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.ஏனைய கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.