பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக செல்கின்றது. இந்த சீசனில் கண்டிப்பாக இறுதிப்போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப்பிற்கு ரெட் கார்டு வழங்கியதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் பிக் பாஸ் குழுவையும் கமலையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும் பிரதீப்பிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல் போட்டியாளர்களுக்கு ஸ்ட்ரிக்டான ஆர்டர் ஒன்றை போட்டார். அதாவது இந்த சீசனில் போட்டியாளர்கள் நாமினேஷன் பற்றி வெளியே விவாதிக்கலாம் என பிக் பாஸ் ஆரம்பத்தில் கூறியிருந்தார். இதையடுத்து ஒரு சில போட்டியாளர்கள் நாமினேஷனுக்காக பல திட்டங்களை தீட்டி வந்தனர். இது நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை குறைப்பதாக எண்ணிய கமல், இனி நாமினேஷன் பற்றி வெளியில் யாரும் பேசக்கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்டார்.
மேலும் கடந்த வாரம் கேப்டனாக செயல்பட்ட பூர்ணிமாவையும் கமல் கடுமையாக விமர்சித்தார். எனவே உலகநாயகன் கமல் இனிமேல் போட்டியாளர்களிடம் ஸ்ட்ரிக்ட்டாக தான் நடந்துகொள்ள வேண்டும். அப்போது தான் ஒரு சில போட்டியாளர்கள் சரியாக விளையாடுவார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே பிரதீப் வெளியேற்றப்பட்டதை அடுத்து பல ரசிகர்கள் வருத்தத்தில் ஏமாற்றத்திலும் இருக்கின்றனர். அவருக்காகத்தான் இந்த சீசனை பார்த்து வந்தோம். அவரே இல்லை என்றபோது இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை நாங்கள் பார்க்கமாட்டோம் என பிரதீப்பின் ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். எனவே ரசிகர்களை குளிர வைக்க பிக் பாஸ் குழு என்ன செய்யலாம் என ஆலோசித்து புது புது முயற்சிகளை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.