சட்டங்களிலும் அரசியலமைப்பிலும் எத்தகைய கட்டளைகள் காணப்பட்டாலும் மக்களின் சக்தியே மிகவும் பலமானது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சராக நேற்று பொறுப்பேற்றதன் பின்னர் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் ,
இலங்கையை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அரச ஊழியர்களுக்கு அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றுவதற்கு அரச தலைமைத்துவத்தை நிறைவேற்றுவதை தவிர வேறு எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை . அதனை நிறைவேற்றுவதற்கு அரச ஊழியர்களின் ஆதரவு அவசியம்.
மேலும் அனைவரும் எதிர்பார்க்கும் இந்த புதிய மாற்றத்தில் பொதுமக்கள் அரச சேவை மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தாமல் முன்னேற முடியாது. அரச சேவையில் வளர்ச்சி அடைந்த ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்டபடுத்தியதாகும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.